Monday, November 15, 2010

நேசபுரத்து தேவதை

நெல்லையப்பர் கோவிலில்
அர்ச்சனை செய்த விபூதி, 
ராகுகால பூஜையில் பெற்ற 
ஆயிரத்தம்மன் குங்குமம்,
சனி தோறும் விரதமிருந்த 
ஆஞ்சநேயர் செந்தூரம்,
என ஒவ்வொன்றாய், விடுமுறை
முடிந்து திரும்பிய தினத்தில்,
மென்சோகம் மறைத்து நகைத்த
அம்மா என் நெற்றியில் பூசிய போது
அவளின் பாசம் போல் அவைகளும்
பொன்னிறமாய் மாறியிருந்தன...

7 comments:

Anonymous said...

அருமை நன்பா

Shunmuga Sundar said...

நன்றி நண்பா :-)

Anonymous said...

Good one!

Siva said...

இன்று முதல் உங்கள் விசிறி ஆகிறேன். இந்த கவிதை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..

Shunmuga Sundar said...

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சிவா :-)

Viji said...

Nice emotion

Shunmuga Sundar said...

thanks viji.