முதல் கவிதைக்காய் தமிழய்யா
பாராட்டியது, கூடைப் பந்து தகராறில்
பாலாவை அடித்தது முதலிய
அந்நாள் பள்ளிக் கதைகளை
மிதிவண்டிப் பின்னிருக்கையில்
பயணித்தவாறே அப்பாவிடம்
சொல்லியது நெஞ்சிலுண்டு.
இன்று,
இரு சக்கர வாகனத்தின் அதே
பின்னிருக்கையில் அப்பா அமர்ந்து
அம்மாவிடம் சண்டை போட்ட,
வயதின் அனுபவக் கதைகளை
என்னிடம் சொல்கிறார்.
கதை கேட்கும் வயதில் நான்
உள்ளேனா என தெரியவில்லை.ஆனால்,
மடியைத் தேடும் மழலையாய்
அப்பா மாறிக் கொண்டிருப்பது
மட்டும் தெளிவாய்ப் புரிந்தது...
17 comments:
மழலைத் திரும்பும் முதுமை!! அருமை!!
nice :)
Thanks a lot Friends :-)
@Anonymous friends, I will be happy if you reveal your identity :-)
Super da.
nice one da..
Nice one boss :)
You reminded me of our childhood days....
Thanks a lot Friends :-)
@Siddik, beautiful those days were. best days of my life
nice da...
Thanks na
nice one da
Thanks na :-)
Romba nalla iruku
Thanks Bhuvana, How are you?
Elimaiyana vaarthaigal..arumaiyana thogupu..!
Romba Nandri :-) Neenga yaaru nu therinchukalama?
Facebook profile open panni paarunga..therinjupinga..
Post a Comment