Thursday, February 3, 2011

சந்தித்த வேளையில்

கன்றை ஈன்ற பசுவின் முதல் சொட்டுப் 
பாலின் இனிமையை உன் முதல்
முகமலர்வு  நினைவூட்டியது.

பட பட மொழியும், குறு குறு இமையும்,
தட தட கதைகளுக்கு விறு விறு சேர்த்தன.

உன் அதிர்வுச் சிரிப்பின் ஆனந்ததிற்கு 
வெண் சோளங்கள் வெளிச்சம் பாய்ச்சின.

கனிவுருவக் கண் கொண்டு நீ சொன்ன
'அச்சச்சோ' வில் கூட அழகுச்சம் இருந்தது.

புருவம் உயர்த்தி வியப்பு காட்டிய போது
கருநிற இரட்டை வானவில் தெரிந்தது.

குளிர் கால குளியலின் கடைசிக் குவளை
வெந்நீரைப்  போல் உன் விடை
கொடுப் புன்னகை என்னை வதைத்தது...

 

7 comments:

Anonymous said...

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை..!! Awesome..!!

svramani08 said...

குளிர்காலக் குளியலின்
கடைசிக் குவளை வெந்நீர் போல
வித்தியாசமான மிகச் சரியான
வார்த்தைப் பிரயோகம்
தொடர வாழ்த்துக்கள்

Shunmuga Sundar said...

@Anonymous, Thanks :-)
@SV.ramani , Thanks for your visit and comment :-)

Sivasankar M said...

//குளிர் கால குளியலின் கடைசிக் குவளை
வெந்நீரைப் போல் உன் விடை
கொடுப் புன்னகை என்னை வதைத்தது...//
பிரிவின் வலியை அழகாக விளக்கும் வரிகள்.. :)

Shunmuga Sundar said...

Thanks Siva :-) I seriously felt that pain during early morning bath in bangalore Climate :-)

Anonymous said...

Wat a feel!

Shunmuga Sundar said...

Thanks :-)