Tuesday, December 14, 2010

கடவுள் ஏன் கடுப்பானார்?

நகர்வலம் வந்த கடவுளும் நானும்
நலம் விசாரித்துக் கொண்டோம் .  
அவரது படைப்பில் நான் வெகுவாக
ரசித்தவை பற்றி சொல்லச் சொன்னார்.

உறை மீளும் வாளின் ஓலியைப் போன்று  நீ
"ம்ம்க்கும்ம்"  சொல்வது பிடிக்கும் என்றேன்.
மேற்கத்திய உடையிலும் நெற்றியில் சிரிக்கும்
மெலிதான பொட்டினை ரசிப்பேன் என்றேன்.

அரக்கு பட்டுச் சேலையில் நான் பார்த்த
முதல் வெட்கம் கவிதை என்றேன்.
நண்பர்கள் சுற்றியிருக்க எனக்கு மட்டும்
புரியும் விழிமொழிகள் வேதம் என்றேன்.

அத்தி பூக்கும் தினங்களில் குழலில் நீ சூடும்
மௌவலின் மணம் மதுரம் என்றேன்.
உயிருருவும் குறுநகையால் என்னைக் 
களவாடிய தருணங்கள் சொர்க்கம் என்றேன்.

பெருங்காவியத்தின் முதல் பத்தியிலே 
இடைமறித்த  கடவுள்  "நீ  கொடுத்து
வைத்தவன்!!!" என்றார். அவர்
கண்களில் பொறாமை இருந்தது...

12 comments:

santha said...

Good one da.

Anonymous said...

நண்பா, பாராட்டுக்கள். மிகவும் அருமை.

Anonymous said...

nice.. - Senthil

RaGhaV said...

உன்னுடைய சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
உண்மையில் நீ கொடுத்துவைத்தவன் தான் :-)

Shunmuga Sundar said...

@All, Thank you for your comment.

Unknown said...

really superb..

Shunmuga Sundar said...

@Raj, Thank you :-)
@Raghav Anna, Koduthu vechurukena nu paakalam :-)

Shakthi said...

@Raaga - உன் அடுத்த வாரிசு டா இவன்.
உன் வார்த்தைகளில் உள்ள நளினமும் அழகும் மிக எளிதாக இருக்கு இவனிடமும்.
உனக்கு அடுத்து நான் ரொம்ப ரசித்த கவிதைகள் இவனுடையது தான் .

Shunmuga Sundar said...

@shakthi anna , மிகையாக இருந்தாலும் உங்கள் பாராட்டு என்னைப் பெருமைப் பட வைக்கிறது :-) மிக்க நன்றி :-)

Anonymous said...

Hi,
just got to see ur blog accidentally.
உங்கள் கவிதைகள் அனைத்தும் வெகு அழகு!!!

Shunmuga Sundar said...

@Anonymous Friend, Thanks for your comment,I will be happy to know your name if you can tell :-)

Anonymous said...

நலம் விரும்பி