Tuesday, November 30, 2010

கீழ்வானமும் என் வானமும்

அகல் விளக்குகளின்  திருநாளன்று 
கதிரவன் கடல் கரையும் மாலையில் 
மகிழ்ச்சித் தோரண வீதியில் நீயும்,
நானும் நடந்து கொண்டிருந்தோம்.

பனிவாடை சாமரம் வீசிய
மனையொன்றின் முற்றத்தில்,
பட்டாடை உடுத்திய சிறுமி ஒருத்தி
எட்டுப் புள்ளி கோலமிட்டு அதில்
எழில்மிகு வண்ணமிட்டு அதன் கீழே
"கார்த்தி" என எழுதிக்  கொண்டிருந்தாள்.

"கார்த்தி பாப்பா, நீ போட்ட கோலம்
ரொம்ப அழகா இருக்கு!!!" என்று
மழலை மொழியில் கூறி, உன்
சாதூர்யத்திற்கு நீயே சபாஷ் சொன்னாய்.
நடப்பது புரியாமல் விழித்தவாறே சிறுமி
"கார்த்திகை தீபம்" என எழுதி முடித்தாள்.

அழகியலின் உச்சத்தை உள்ளுக்குள் ரசித்து
கேலி செய்த என் கண்களைத் தவிர்க்க
நாணத்தில் நிலம் நோக்கிய உன்னைப் 
போல் அந்தி வானமும் சிவந்திருந்தது...

7 comments:

Anonymous said...

மிக நன்று

Anonymous said...

Nalla iruku thambi!!

Jaya said...

Adept Writing!

santha said...

Good one :)

Shunmuga Sundar said...

Thank you friends for your visit and comment :-)

RaGhaV said...

என்ன சொல்றதுன்னே தெரியல
அற்புதமான கவிதை.. :-)
என்னென்னமோ நினைவுக்கு வருது
உன்ன சபிக்க தோனுது.. :-(

Shunmuga Sundar said...

@ ராகவ் அண்ணா, மிக்க நன்றி. உங்க நினைவுகளை என் கவிதை கிளறி இருந்தால் மன்னிச்சுருங்க.