Wednesday, October 20, 2010

ஒற்றைப் பனை

அப்பாவின் மடியில் அமர
சண்டையிடும் குட்டித் தங்கை,
அளவில்லா செல்லம் தந்து
அரவணைக்கும் அன்பு அண்ணன்,
சீருடை அணிவித்து சின்னதாய்
கண்டிக்கும் அழகு அக்கா,
பஞ்சு மிட்டாய் பஞ்சாயத்திற்காய் 
கிள்ளி வைக்கும் குறும்பு தம்பி,
என எவருமில்லா தனி வீட்டில்
செப்புச் சாமான்கள் மற்றும்
பொம்மைகளுடன் எதிர் வீட்டைப் 
பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தாள்
ஒற்றையாய் பிறந்த ஷ்ரேயா குட்டி..

6 comments:

thiyaa said...

பிடிச்சிருக்கு

RaGhaV said...

அருமை.. :-)

Shunmuga Sundar said...

@தியா , மிக்க நன்றி :-)
@ராகவ் அண்ணா, நன்றி. உங்களது அடுத்த படைப்பு எப்போது?

Anonymous said...

என்னை அழவைத்த வரிகள்

viji said...

Nice.. real story of all individuals...

Shunmuga Sundar said...

Thanks viji :-)