Sunday, August 29, 2010

ஒரு மென்பொறியாளன் புலம்பல்

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா  வெறுப்புடன் தொடங்குகிறது  அந்நாள்.

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய்
ஃபேஸ்புக்கில்  சிரிக்க, பெங்களுரைத் தாண்டாத
விரக்திகள்  எரிச்சலைக்  கிளப்புகிறது.

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.

பாசமாக பேசும்,  பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம்  கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது'
போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள்
"செல்லமே" கூட முடிந்து விடுகிறது. 


செம்மறி ஆடுகள்
பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
மென்பொறியாளர்கள்
பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

28 comments:

santha said...

Good one da.

Shunmuga Sundar said...

thanks anna :-)

Anonymous said...

Nee romba nallavan da!!

Raji said...

Nice..!! :)

Sindhu said...

Finishing touch ultimate :) Very nice choice of words! :) Please keep em coming!!

Shunmuga Sundar said...

Thank you Raji, Sindhu and 'Anonymous' :-)

ramraj said...

Anna...kallakal...

Unknown said...

Nice one sundar...

மென்பொறியாளர்கள்
பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

100% true.. reflects our day to day life events....special thanks !

Bharath Ram Vivek N said...

நண்பா,
ரொம்ப அடி வாங்கி இருப்ப போல :-( ;-)
Nice portrayal of feelings of a large section of மென்பொறியாளர்கள் !!

Shunmuga Sundar said...

Thanks boss, suganya and ramraj :-)

viji said...

Hi sundar,
kadaisi 2 varigal unmai vilimibi.. :):)
"புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து" - awesome... romba nalla iruku.. :P

Shunmuga Sundar said...

@viji, thanks a lot.
@all, Ur comments are highly valued.please script it even you dont like :-)

Sathiya said...

excellent ....

Shunmuga Sundar said...

Thank you Sathiya for your visit and comment :-)

Shakthi said...

good feel dude

Shunmuga Sundar said...

Thanks Shakthi anna

Unknown said...

உண்மை.... மிகவும் அருமை.

Shunmuga Sundar said...

Thank you Varshini :-)

Anonymous said...

I really like it

Shunmuga Sundar said...

@Anonymous, thanks a lot. please mention ur name when you comment.

rooto said...

நன்றாக இருக்கிறது,யதார்த்தமான வரிகள்!!!

Shunmuga Sundar said...

Thanks a lot rooto :-)

Anonymous said...

enna sundar, unarchigalai kottirukeenga pola.. very nice..
last two lines are awesome..

-- Senthil

Shunmuga Sundar said...

Same blood Senthil. Thanks a lot for your comment :-)

Ananda said...

//பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது'
போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள்
"செல்லமே" கூட முடிந்து விடுகிறது.
//


மிக அருமையான வரிகள்.

உங்களுக்கு தெரியாது இப்போது எங்கள் அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்குமாய் மின்னஞ்சலில் அலைவது உங்களுடைய இந்த கவிதை தான்.

வாழ்க வளர்க.


-ஆதிரை

Shunmuga Sundar said...

மிக்க நன்றி ஆதிரை. உங்கள் பாராட்டை விட பெரிய சன்மானம் எதுவும் இல்லை. மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய எல்லா கவிதைகளையும் படித்து, தவறுகளை சுட்டிக் காட்டி என்னை ஊக்குவிக்குமாறு கொள்கிறேன் :-)

Ananda said...

//மிக்க நன்றி ஆதிரை. உங்கள் பாராட்டை விட பெரிய சன்மானம் எதுவும் இல்லை. மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய எல்லா கவிதைகளையும் படித்து, தவறுகளை சுட்டிக் காட்டி என்னை ஊக்குவிக்குமாறு கொள்கிறேன் :-)
//

நிச்சயமாக!.

Unknown said...

பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

========
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை........