Saturday, January 2, 2010

நள்ளிரவு லட்சியம்

அன்று, பனி பொழியும் இரவு
பாதி தூரம் பயணித்திருக்கும்,
சார்பியல் கொள்கையின் நீண்ட இரவில்
விழித்த இமைகளுடன்
எரிமலையின் மண்புழுவைப் போல
பசித்த வயிறுடன்
நெளிந்து கொண்டிருக்கிறேன்.
அழுவதற்கான கண்ணீரும்
தண்ணீரைப் போல வற்றி விட்டது.
புழுதி மண்டிய நகரச் சாலையின்
சாக்கடை விளிம்பில்
மெலிந்த தேகத்துடன்,
ரணமான  கால்களுடன்,
அலைந்து கொண்டிருக்கிறேன்
உலகின் மகத்துவமான பசியைப்
போக்கும் உணவைத் தேடி...
மூன்று வேளை வயிராற உண்ணும்
உங்களுக்கு என் தேடல்
சாதாரணமாகத் தெரியலாம்
ஆனால்
எனக்கோ நள்ளிரவு லட்சியம்

5 comments:

RaGhaV said...

அருமையான கவிதை சுந்தர்.. :-))

Shunmuga Sundar said...

உங்கள் பாராட்டு என்னை ஊக்குவிக்கிறது.
மிக்க நன்றி ராகவ் அண்ணா :-)

Raji said...

My Hearty congrats on the Good work da..!! :)

Rama said...

Really Superb.en paerai kaapaathita po:)

Shunmuga Sundar said...

thanks raji and rama :-)