Saturday, December 26, 2009

பிரிவோம் சந்திப்போம்

காக்கைக் கூட்டம் நாங்கள் என்பதை
காலை உணவில் கண்டு கொண்டோம்.
காலைக் குளியல் கனவு என்பதை
காலப் போக்கில் புரிந்து கொண்டோம்.


திருநீறு மணக்கும் நெற்றியை
தேர்வு தோறும் காணலாம்.
நாமம் சுமக்கும் மகிழ்ச்சிதனை
தேர்வின் முடிவில் அறியலாம்.


அறிவைப் பகிரும் ஆர்வத்தை விட
அறியாமையைப் பகிரும் இன்பம் மிகுதி.
அன்று வென்றோம் மெல்லிய இதயம்.
என்று பார்த்தோம் சூரிய உதயம்?


உறக்கமில்லா இரவுகளிலும் சோம்பல் இல்லை
மதிய வகுப்புகளில் விழித்ததே இல்லை.
அர்த்தமில்லா அரட்டைகள் சலித்ததே இல்லை.
அழகின் தரிசனங்கள் துறந்ததே இல்லை.


நான்கு பேர் அடித்த போதும் வலித்ததில்லை
நண்பன் சொன்ன வார்த்தைக்காக அழுததுண்டு.
ஈசலைப் போலவே சண்டைகளும் கோபங்களும்
அற்ப ஆயுளில் மடிந்து மறக்கப்பட்டது.


நிராகரிப்புகள் வலியைத் தந்தாலும்
விசாரிப்புகள் வசந்தம் தந்தன.
நாங்கள் சாயத் தோள்கள் இருந்ததால்
வாள்கள் வீசப் பயந்தன தோல்விகள்.

வாழ்க்கை என்பது
மகிழ்ச்சித் தருணங்களின் தோரணம்.
நெஞ்சில் தித்திக்கும் கல்லூரி நினைவுகளுடன்
பிரிவோம் சந்திப்போம் . . .


குறிப்பு : உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை


போட்டியில் பங்கேற்க்க விரும்புவோருக்கான விவரங்கள் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அன்பர்களின் கவிதைகள்...

28 comments:

Anonymous said...

Pirivom Santhipom....
Depicts our college life.These lines are so true. It makes me to turn back our college days friendship. :)

"நான்கு பேர் அடித்த போதும் வலித்ததில்லை
நண்பன் சொன்ன வார்த்தைக்காக அழுததுண்டு"

U proved ur talent once again Sundar.

Unknown said...

Sundara form ku vandhuta pola...

really nice da...

sugan said...

பிரிவோம் சந்திப்போம்
great...! really very nice.

ஊசூ said...

Hi,
Are u from CIT, If so am from CIT 2006 passed out..All da best

Shunmuga Sundar said...

hello all,
thanks for ur comments.
hello ஊசூ,
I am also from CIT, 2008 passed out.

ஊசூ said...

Hi,
Good...When i read the poem , it remind 'CIT' 1y..I was thinking this guy shud be from my coll...After i saw Sai Nandhan comments, i am convinced that u are from CIT.I knew him well...Good Work...All da best

crack-the-gmat said...

Good start to ur blog da....very realistic..!!

Bharath Ram Vivek N said...

Gr8 work da Sundar... Eager to see more from u... Let this not stop abruptly like ur earlier blog(SundarKavithaikal)... Keep going... Expecting more of ur new படைப்புகள்...

Balakumar Vijayaraman said...

நல்லா இருக்கு, சுந்தர். வாழ்த்துக்கள்.

Sattish said...

Anna kalakuringa !!!

தெறிக்கும் கதிர் said...

romba arumai nanba..

thiyaa said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Marimuthu Murugan said...

கலக்கல் ...
வாழ்த்துக்கள்..

Raji said...

Nice da.. All the Best..!! :)

Parker - My PenName said...

Good one da... Hoping to see more!!

Rama said...

Arumaiya iruku sundar...2nd and 5th paragraph super...Vetri Pera en vaazhutkal:)
-Rama

Unknown said...

Superb :-)

Bala said...

Machn kalakkitta da!!! All nostalgic moments...

RaGhaV said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு சுந்தர்.. வாழ்த்துக்கள்.. :-)

விஜய் said...

பரிசு பெற வாழ்த்துக்கள்

விஜய்

Unknown said...

Chanceless da.. Tears flowing from my eyes.. Keep rocking!

Thenammai Lakshmanan said...

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Gayathri said...

Sundar,
Very good job...Keep it up!!!

These lines stay close to my heart..and I badly want to get back to those unforgettable, beautiful days in my life!!!CIT rocks!!!!

Expecting lot more...

Radhakrishnan said...

கவிதை அருமையாக இருக்கிறது.

Shunmuga Sundar said...

வணக்கம் தேனம்மை மற்றும் ராதாகிருஷ்ணன்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :-)

எழிலரசன் said...

இக்கவிதை மிக அருமை...

உங்கள் எதிர்காலம் இந்த கவிதையில் தென்படுகிறது...

என்றும் நல்ல தரமான எழுத்துக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நடைபோடுங்கள்...

Shunmuga Sundar said...

நன்றி எழிலரசன்:-)

Anonymous said...

romba nalla irukku boss...

by
Karthick.K