அடைமழையின் பிடிவாதத்துடன் நீ
அழகாக உரையாடுவாய்,
ஆனந்தப் பரவசத்தில்
அடங்கிப் போகும் என் வார்த்தைகள்.
உன் மதிநூட்ப தர்க்கங்கள்
மழை நேர தேநீர் ரசனை,
மழலை கொஞ்சும் உன் கோபம்
குளிர் இரவின் கம்பளியின் வெப்பம்,
உன்னுடன் உணவருந்திய அன்று
பிறவிப்பயன் அடைந்தன பதார்த்தங்கள்,
நொடிகள் யுகங்களாய் உன் பிரிவில்
மாறிப் போயின யதார்த்தங்கள்.
நீ குழலில் சூட மறுத்ததில்
மேகங்கள் எல்லாம் கோபத்தில்,
உன்னை மகிழ்வித்த மகிழ்ச்சியில்
பொய்கள் எல்லாம் சொர்க்கத்தில்.
இன்னும் தீர்ந்த பாடில்லை
குயில் உனக்கு
பின்னணிக்குரல் கொடுக்கிறதா
என்ற சந்தேகமும்
உன் மீது நான் கொண்ட
பேரன்பும்..
நடமாடும் நித்திலமே,
இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
ஓர் எல்லை உண்டு.
நீ
எல்லை தாண்டிய பயங்கரவாதி...
7 comments:
Very nice..!!!
indha poigal yarukaga? super anna.... en anna nu prove panringa:-) very good,keep it up...:-)
poi nale azhagu than, ungaloda 'santhosa poigal' rombave azhagu!! :)
siva, neenga solra poi kooda azhaga than iruku :-)
நீ குழலில் சூட மறுத்ததில்
மேகங்கள் எல்லாம் கோபத்தில்,
உன்னை மகிழ்வித்த மகிழ்ச்சியில்
பொய்கள் எல்லாம் சொர்க்கத்தில்.
Intha line romba azhaga iruku.....
Un dream girl ah romba nalla varnichi iruka :)
Kalakkura....
-Saranya
Machn, naalukku naal develop agitte vara da... Keepit up... romba azhaga irukku...
thanks da bala.
Post a Comment